திமுகவில் இணைந்தார் பிரபல நடிகர்!
சேலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகர் பெஞ்சமின். இவர், திருப்பாச்சி, வெற்றிக்கொடிக்கட்டு, ஆட்டோ கிராப், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சேலம் வடக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் 150-க்கும் மேற்பட்டவர்களும்தி.மு.க.வில் இணைந்தனர்.
