தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு”: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை(மே12) கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கோடை வெப்பம் அதிகரித்ததால் வெப்ப அலை வீச ஆரம்பித்தது. இதன் காரணமாக சென்னை, கரூர், திருப்பத்தூர், உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வீசியது.
இதனால் மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர். மேலும் கடந்த 4ம் தேதி முதல் கத்தரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் ஆரம்பித்தது. இதனால் வெப்பம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.