விவசாயிகள் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது!

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *