“இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்” மா.சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை: இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் OMR சாலையில் வெயிலின் தாகத்தை தணிக்கும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. பெருங்குடி, சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் நீர் மோர் பந்தலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உடல் உறுப்பு தானம் செய்வர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற அறிவித்தார்.அதை தற்பொழுது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள்” என மா.சுப்பிரமணியன் முதல்வருக்கு புகழாரம் சூட்டினார். மூளைச்சாவு அடைந்தவர்கள் கடந்த ஆண்டு 178 பேர் 1000 உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். 1000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் பயன்பெற்றுள்ளனர். இந்தியாவில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகம் மேற்கொண்டதற்கு தமிழகத்திற்கு சிறந்த மாநிலமாக பட்டம் வழங்கினர். கடந்த 2022ம் ஆண்டு 156 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு முதல் இதுவரை, 280 பேரிடமிருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, 1,595 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 6, 7 ஆண்டுகளில் இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் கொண்டார். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ஒரு மனிதநேயமிக்க பாராட்டும் நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.