அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 600க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சீறி பாய்ந்த காளைகளை அடக்க 350 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்
அரியலூர் மாவட்டம் கள்ளூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டுள்ளன போட்டியை அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சித்தனர் காளைகளை அடக்கிய காளையர்களுக்கும் அடங்காமல் சிரிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன அசம்பா விதங்களை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் எடுப்பட்டனர் போட்டியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ துறை சார்பில் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.