வடலூரில் தூய இருதய ஆண்டவர் ஆலய ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூர் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது,இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி தூய இருதய ஆண்டவரின் ஆடம்பர தேர் பவனி நடைபெறுவது வழக்கம் இதேபோன்று இந்த ஆண்டும் தூய இருதய ஆண்டவரின் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது வடலூர் பங்குத்தந்தை லூர்து ஜெயசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் சமணசு, மாதா, மற்றும் இருதய ஆண்டவர் சுருபம் ஆகியவை அலங்கரிக்கப்பட்ட தேரில் வடலூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக இளைஞர்களால் இழுத்துச் செல்லப்பட்டது அப்பொழுது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் தேருடன் ஊர்வலமாக கிறிஸ்தவ பாடல்கள் படியபடி சென்றனர் நிறைவில் வடலூர் இருதய ஆண்டவர் ஆலயத்தை வந்தடைந்தது விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு இறை வழிபாடு மேற்கொண்டனர் பின்னர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை மேற்கொள்ளப்பட்டது இதனால் வடலூர் பகுதியே விழாக் காலம் புண்டது.