இலையூரில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம், இலையூரில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலைமைச்சர் தளபதியார் அவர்களின் உத்தரவிற்கினங்க, ஆண்டிமடம்(தெ) ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், திராவிட மாடல் அரசின் “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் டிஎம்டி. அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.இதில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் வரவேற்புரையயும் , நிறைவாக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகர் நன்றியுரையும் வழங்கினார்கள்.இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.இதில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கலியபெருமாள், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தருமதுரை,மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் இராணி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேகர், ஒன்றிய அவைத்தலைவர் பாலு, ஒன்றிய பொருளாளர் கிரேஸ் சுப்ரமணியன், ஒன்றிய கழக துணை செயலாளர்கள் செந்தில்குமார், கென்னடி, அன்பழகி முத்துக்குமரன், மாவட்ட பிரதிநிதிகள் தனசேகரன்,சிவமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கோதை தன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்குமார் மற்றும் கிளை கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.