ஜெயங்கொண்டம் அன்னை தெரேசா நர்சிங் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரேசா நர்சிங் கல்லூரியில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் மேகநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்;முன்னதாக பரபிரஹ்மம் பவுண்டேஷன் நிறுவனத் தாளாளர் முத்துக்குமரன் வரவேற்றார்.இதில் அன்னை தெரேசா நர்சிங் கல்லூரி மாணவர்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். இப்பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு அரசு கலைக் கல்லூரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வழியாக அண்ணா சிலை அருகே சென்று நிறைவடைந்தது.இதில் மாவட்ட புகையிலை தடுப்பு அலகின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பிரியா முன்னிலை வகித்து புகையிலை ஒழிப்பு குறித்து விளக்கினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செல்வகார்த்தி உள்ளிட்டவர்கள் மேற்கொண்டனர். கல்லூரி ஆசிரியர்கள் மாலதி, பாரதி, கல்லூரி செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.