வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட கூலி தொழிலாளியின் மகனுக்கு பள்ளியில் பாராட்டு மழை.
“செய்தி வேல்முருகன், “
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர் வெ. நித்திஷ் குமார் மற்றும் வழிகாட்டியான அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆமணக்கந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி நடராஜன் தலைமை தாங்கினார்.
வட்டார கல்வி அலுவலர் க.இராசாத்தி , ஆசிரியர் பயிற்றுநர் சு.ஐயப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் ச.சாந்தி வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர் அ.மதலைராஜ் வெற்றி பெற்ற மாணவருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்து மாநில அளவிலான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்ற 25 மாணவர்களை வெளிநாடு கல்விபயணம் செல்ல உள்ளனர். அதில் அரியலூர் மாவட்டத்தில் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் வெ.நித்திஷ்குமார் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி ஆசிரியர்கள் ஹேமலதா, ஜெயப்பிரியா, பவானி, கவிதா, ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி மின்னல்கொடி வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் , பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கணித பட்டதாரி ஆசிரியர் கு.செல்லதுரை நன்றி கூறினார்.
தின கூலிவேலை செய்யும் பெற்றோர்
வெங்கடேசன்,
மின்னல்கொடி
ஆகியோர் தங்கள் மகன் மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாடு செல்லவதை பெருமையாக எண்ணி தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.