ஏன் இதை மட்டும்* எந்த *ஊராட்சிகளிலும், இளைஞர்மன்றங்களும்,எந்த சமூக அமைப்புகளும் பெரிதாக செய்வதில்லை* என்று தெரியவில்லை
வணக்கம்
*தமிழகத்தில் எல்லா ஊராட்சிகளிலும்,இளைஞர்கள்,கல்லூரி மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள்* என பல சமூகம் அமைப்புகள் இருக்கிறது.
*ஒவ்வொரு சமூக அமைப்புகளும் மரம்நடுதல்,ஏரிதூர்வார்தல்,இலவச மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற சமூகப் பணிகளை செய்கிறவர்கள்…* இவை அனைத்தையும் விட முக்கியமான *சமூகப் பணியே ஓட்டுக்கு பணம் வாங்காத சமூகத்தை உருவாக்குவது..* இதை சரியாக செய்து விட்டால் மற்றவைகள் தானாக நடக்கும்..
*ஏன் இதை மட்டும்* எந்த *ஊராட்சிகளிலும், இளைஞர்மன்றங்களும்,எந்த சமூக அமைப்புகளும் பெரிதாக செய்வதில்லை* என்று தெரியவில்லை..
*ஆண்டுதோறும் பட்டமளிப்பு,பாராட்டு சான்றிதழ்,விருதுகள் வழங்கும் அமைப்புகள் கூட செய்வதில்லை..*
ஒவ்வொரு இளைஞர்களும், சமூக அமைப்புகளும் *தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களை ஓட்டுக்கு பணம் வாங்காத வண்ணம் விழிப்புணர்வு* ஏற்படுத்தினாலே சமூகம் மாற்றம் நடைபெறும்.
*மாற்றம் ஒன்றே மாறாதது.*
*வாக்குக்கு பணம் வாங்காத வண்ணம் இருக்க நல்ல தமிழ் சமூகத்தை உருவாக்க விழிப்புணர்வு செய்வீர்களா..* செய்வீர்களா..
நம் குடும்பத்தில் இருந்து *தொடங்குவோம்…. மாற்றத்தை நோக்கி…*
மீனானது புழுவிற்கு ஆசைப்பட்டு தூண்டிலில் மாட்டி கொள்வது போல், தேர்தல் நேரத்தில் கிடைக்கின்ற பணத்தின் மீது ஆசைப்பட்டு மக்கள் எதிர்கால நலனை இழக்க நேரிடும்.
*வாக்கு செலுத்த பணம் பெறுவது தவிட்டிற்கு தங்கத்தை விற்பதற்கு ஒப்பாகும்* – அண்ணா
*எவருக்கு வேண்டுமானானும் வாக்களிக்கலாம், கவருக்கு வாக்களிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன்* : சகாயம் IAS
*காசு வாங்காம ஓட்டு போடுற அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்.*
*பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் அரசியல்வாதிகளிடம் நியாயம் கேட்க முடியாது..*
*வோட்டு போடறவன் மனுசன், பணம் வாங்காம வோட்டு போடறவன் பெரிய மனுஷன்.*
நன்றி