வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், புதிய கழிவறை திறப்பு

வடலூர். மார்ச்.2 –
வடலூர்நகராட்சி புதுநகர்
வார்டு எண் 18ல் உள்ள புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள்,  மாணவ, மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர் கே பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் சேவை நிறுவனத்தினர், மாணவ மாணவியருக்கு கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டது, இதனை  பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு  குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட கல்வி குழு தலைவருமான பொறியாளர், வி.சிவக்குமார் திறந்துவைத்தார், நிகழ்ச்சியில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர கழக செயலாளர்
தன,தமிழ்செல்வன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial