தமிழ்நியூஸ், மீடியா, செய்தி,கதம்பம்”
“அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழக அரசு உத்தரவு ரத்து.”
பாதுகாப்பு கோரிய சி.வி.சண்முகம் மனுவை 8 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
“டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு.”
மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
“தேனி அதிமுக எம்.பி., ஓ.பி.ரவீந்திர நாத்-ன் 2019 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.”
“ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பறிமுதல்.”
“ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 22 கார்கள் பறிமுதல்”
நிறுவனங்கள், இயக்குனர்கள் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96 கோடி முடக்கம்.
நிறுவன இயக்குனர்கள், முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசையம்மாள் செய்தியாளர் சந்திப்பு.
“கேரளாவின் தேவிகுளம் தொகுதி சிபிஎம் எம்.எல்.ஏ. ராஜாவின் 2021 தேர்தல் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.”
“ஜூலை மாதம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைப்பு; அதுவரை சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அவர் பங்கேற்கலாம் எனவும், மசோதாக்களில் வாக்களிக்க கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிப்பு.”
“தேர்தலில் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு; குற்றப்பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.”
“முப்பது,நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரரான திமுக நிர்வாகி மிலானிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி உத்தரவு.”
“அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் தமிழக டிஜிபி 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” – தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு.
பல்வீர்சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கவும் உத்தரவு
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆசிக் கோயல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகாரின் மீது உத்தரவு.
“தமிழகத்தில் நடைபெற்ற TNPSC குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.”
தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம்
கடந்த நவம்பர் மாதம் 2 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.