கல்வி சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து மாணவி பலி; 40க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் ஒரு பஸ்ஸில் கல்வி சுற்றுலா சென்றனர். பஸ் புறப்பட்டு 500 மீட்டர் தூரம் மட்டுமே சென்ற நிலையில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பஸ்ஸில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி சுற்றுலா செல்ல முயன்ற மாணவிகள் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *