ஆஹா.. வாட்ஸ் அப் சாட் தெரியாம டெலீட் ஆகிடுச்சா? கவலையே வேண்டாம்.. இதோ 5 ஸ்டெப்ஸ் தான்! சிம்பிள்!
25.07.2023
வாட்ஸ் அப் மெசேஜ்களை தவறுதலாக அழித்துவிட்டீர்களா? மீண்டும் உங்கள் அத்தனை மெசேஜ்களும் திரும்பக் கிடைக்க வேண்டுமா? நீங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப் பேக்கப் வசதியை இயக்கி வைத்திருந்தால் 5 எளிதான ஸ்டெப்களில் சாட் ஹிஸ்டரியை மொத்தமாக மீட்டெடுத்து விடலாம்.
நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உரையாடுவதற்கு அதிகமாக நாம் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறோம். ஆபீஸ் டீம் உரையாடல்களும், நண்பர்களுடனான அரட்டைகளும், வாட்ஸ் அப் குரூப்களிலேயே பெரும்பாலும் நடக்கின்றன. சமயங்களில் சில முக்கியமான வாட்ஸ் அப் சாட்டை தவறுதலாக நீக்கிவிட்டு என்ன செய்வது எனக் கலங்கியிருப்போம். அல்லது போன் செயலிழந்து போனதால், புது போனுக்கு மாறும் கட்டாயம் ஏற்பட்டு பழைய சாட்களை இழந்திருப்போம்.
அப்படி, வாட்ஸ் அப் சாட்டை தெரியாமல் டெலீட் செய்துவிட்டு வருந்துகிறீர்கள் என்றால், கவலையே வேண்டாம். 5 சிம்பிளான ஸ்டெப்களில் நீங்கள் இழந்த சாட் அனைத்தையும் மீட்டெடுத்து விடலாம். நீங்கள் ஏற்கனவே உங்கள் வாட்ஸ் அப் சாட்டை பேக்கப் செய்திருந்தால் மட்டுமே மீட்டெடுக்க முடியும்.
வாட்ஸ் அப் மெசேஜ்களை மீட்டெடுப்பது எப்படி?:
1. முதலில் உங்கள் போனில் இருந்து வாட்ஸ் அப் ஆப்பை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
2. அதன் பிறகு வாட்ஸ் அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
3. பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை உள்ளிட வேண்டும். உங்கள் எண்ணுக்கு ஒரு OTP வரும், அதை உள்ளிடவும்.
4. அப்போது பேக்கப் ரீஸ்டோர் ஆப்ஷன் காட்டப்படும். அதனைத் தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து உங்கள் டேட்டா பேக்கப் மீண்டும் வரத் தொடங்கும்.
5. நீங்கள் இழந்த அத்தனை வாட்ஸ் அப் மெசேஜ்களையும் மீண்டும் பார்க்க முடியும். இதற்கு முன்கூட்டியே வாட்ஸ் அப் சாட்டை பேக்கப் செய்திருக்க வேண்டியது அவசியம்.
வாட்ஸ் அப் சாட்களை பேக்கப் செய்வது எப்படி?:
1. முதலில் நீங்கள் வாட்ஸ் அப்பை திறந்து, ஆப்ஷன்ஸ் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
2. அதில் செட்டிங்ஸ் கிளிக் செய்து Chats என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. பிறகு, Chat backup சென்று, பேக்கப் என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
4. உங்கள் பேக்கப்பை சேமிக்க கூகுள் டிரைவ் அக்கவுண்டை இங்கே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. உங்கள் போனில் கூகுள் அக்கவுண்ட் சேமிக்கப்படவில்லை என்றால், நீங்கள் Add Account என்பதை தேர்வு செய்து உங்கள் விவரங்களை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். லோக்கல் டிவைசிலும் பேக்கப் செய்யும் ஆப்ஷன் உள்ளது.
6.இதற்குப் பிறகு Backup over என்பதை தெர்ந்தெடுத்து, பேக்கப் செய்வதற்கான நெட்வொர்க்கை தேர்வு செய்தால் போதும்.
7. உங்கள் WhatsApp சாட் பேக்கப் ஆகிவிடும். தினசரி, வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை என்றும் பேக் அப் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.
8.வீடியோக்கள் அதிக டேட்டாவை பிடிக்கும் என்பதால், அவை பேக்கப் தேவையா இல்லையா என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்