ஜெயங்கொண்டம் அன்னை தெரசாமேல்நிலைப் பள்ளிமாணவர்கள் நெட்பால் போட்டி மாநில அளவில் தேர்வு
ஜெயங்கொண்டம்,அன்னை தெரசாமேல்நிலைப் பள்ளிமாணவர்கள் நெட்பால் போட்டி மாநில அளவில் தேர்வு
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக விருதுநகரில் நடைபெற்ற எஸ்ஜிஎப்ஐ,நெட் பால்போட்டியில் ஜெயங்கொண்டம்,அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் தேர்வாகியுள்ளனர் இம் மாணவர்கள் இந்திய பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் தேசிய அளவிலான நெட்பால் போட்டி வருகிற நவம்பர் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கு பெற உள்ள தமிழக நெட்பால் அணியினை விருதுநகரில், அக் 10ந்தேதி, தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஜெயங்கொண்டம்
அன்னை தெரசா மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் கோபிச்சந்த்,பரணீஸ்வரன்,
ஜீவராகவன் ,மாணவிகள் கனிஷ்கா,கிருத்திகா ஆகியோர் தேர்வாகியுள்ளதை பாராட்டும் விதமாக பள்ளி.தாளாளரும் பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனருமாகிய பரப்ரம்மம் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், பள்ளிமுதல்வர் தனலட்சுமி, துணைமுதல்வர் தாரணி,உடற்கல்விஆசிரியர் கார்த்திக்ராஜன், மற்றும் ஆசிரியர்கள் தேர்வுபெற்ற மாணவர்களை வாழ்த்திபேசினர்.
“அரியலூர் மாவட்டம் செய்தியாளர் வேல்முருகன்.”