குறிஞ்சிப்பாடி அருகே ஆடுர்குப்பம் கிராமத்தில் 30 ஆண்டுகளாக தபால்காரராக சிறப்பாக பணி புரிந்தற்கு பாராட்டு விழா.
குறிஞ்சிப்பாடி அருகே ஆடுர்குப்பம் கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் உதயகுமார் என்பவர் 30 ஆண்டுகளாக தபால்காராக பணிபுரிந்துள்ளார். இவரது சிறந்த சேவையை பாராட்டும் வகையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இவர் ஓய்வு பெறும் நாளில் பாராட்டு விழா நடத்தி பெருமைப்படுத்தினார்கள்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொறியாளர் கார்த்திகேயன் வரவேற்றார். போஸ்ட் மாஸ்டர் அனிதா வாழ்த்தி பேசினார்.கிராம பிரமுகர்கள் சுந்தரம், ராமச்சந்திரன், சின்னசாமி, செல்வம், ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொறியாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.