புரட்டாசி அமாவசையை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுக்தாற்றில் திதி கொடுக்க திரண்ட மக்கள்
புரட்டாசி அமாவசையை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுக்தாற்றில் திதி கொடுக்க திரண்ட மக்கள்
கடலூர் மாவட்டம்விருத்தாசலம்,
சூரியன் கன்னி ராசியில் பயணிக்கும் புரட்டாசி மாதம் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். நம்முடன் சில காலம் தங்கியிருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய அமாவாசை தினத்தன்று தமிழ்நாட்டில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அந்தவகையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் பொதுமக்கள் பலர் கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். தர்ப்பணம் கொடுத்த மக்கள் அகத்திக்கீரை வாழைப்பழம் ஆகியவற்றை அங்கு நின்ற பசு மாடுகளுக்கு தானமாக கொடுத்து, சூரிய நமஸ்காரம் செய்து விருத்தகிரீஸ்வரரை வழிபட்டுச் சென்றனர்.