மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!!!
சென்னையின் பல்வேறு பகுதிகள் கன மழையால் பாதிப்பைச் சந்தித்தன. இதில் தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையால் இயல்பு நிலை உடனே மீட்டெடுக்கப்பட்டது. வெள்ள பாதிப்பைச் சந்தித்த வட சென்னை பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவுகிற விதமாக வடசென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர் கலாநிதியின் ஏற்பாட்டில், 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் வகையில், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் நிவாரணங்கள் அடங்கிய தொகுப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.