குளிர்பானத்தில் சிறுமிக்கு மதுபானம் கலந்து கொடுத்து கற்பழிப்பு!!!
பீகார் மாநிலம் சிதமாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் (வயது 23) மற்றும் ரூபேஷ்குமார் (வயது21). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலை மருதுறையான்வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு ரூபேஷ்குமார் வந்தார். அப்போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வடமாநிலத்தில் இருந்து வந்த ரெயில் மூலம் திருப்பூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ரூபேஷ்குமாரை சந்தித்த அந்த சிறுமி, தனக்கு படிப்பு வராததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வேலை தேடி தனியாக திருப்பூர் வந்துள்ளதாக கூறியுள்ளார். இங்கு வேலை ஏதும் கிடைக்குமா? தொழில் சார்ந்த எங்கு நிறுவனங்கள் உள்ளன என கேட்டுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட அவர், அந்த சிறுமிக்கு உதவியுள்ளார். இதனையடுத்து புத்தாண்டை கொண்டாட கேக் வெட்டலாம் எனக் கூறி சிறுமியை அழைத்து குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார். இதில் சிறுமிக்கு போதை ஏறவே அவரை நிதிஷ்குமாரும், ரூபேஷ்குமாரும் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே அவர்கள் 2 பேரும் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…