தேர்தலையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் “டிரான்ஸ்பர்”…!
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் திருச்சி மாநகர் மற்றும் மத்திய மண்டலத்தில் 54 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி மாநகரில் இருந்து 28 இன்ஸ்பெக்டர்கள் மத்திய மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் தஞ்சை சரகத்துக்கும், 18 பேர் திருச்சி சரகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல் மத்திய மண்டலத்தில் இருந்து 26 பேர் திருச்சி மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விவரம் (அடைப்புக்குள் தற்போது பணியாற்றும் போலீஸ் நிலையம்) வருமாறு:-எஸ்.ஜெயா (கே.கே.நகர் குற்றப்பிரிவு), என்.சேரன் (அரியமங்கலம் குற்றப்பிரிவு), என்.மலைச்சாமி (விமானநிலையம்), எம்.ஆனந்திவேதவல்லி (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), ஆர்.சிந்துநதி (சைபர்கிரைம்), எம்.அருள்ஜோதி (காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு), கே.கார்த்திகா (பொன்மலை அனைத்து மகளிர்), டி.மோகன் (உறையூர் குற்றப்பிரிவு), பி.சுலோச்சனா (கோட்டை குற்றப்பிரிவு), பி.ஸ்ரீதர் (ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு) ஆகியோர் திருச்சி மாநகரில் இருந்து தஞ்சை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.என்.கயல்விழி (பொருளாதார குற்றப்பிரிவு), ஏ.ராஜேந்திரன் (மாநகர குற்றப்பதிவேட்டு கூடம்), ஏ.முருகவேல் (நுண்ணறிவு பிரிவு பாதுகாப்பு), கே.எம்.சிவக்குமார் (கண்டோன்மெண்ட்), ஜி.கோசலைராமன் (மாநகர குற்றப்பிரிவு-1), எஸ்.ராஜா (உறையூர்), கே.வனிதா (ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர்), பி.சரஸ்வதி (மாநகர குற்றப்பரிவு-2), எஸ்.அரங்கநாதன் (ஸ்ரீரங்கம்), பி.ரமேஷ் (காந்தி மார்க்கெட்), டி.கருணாகரன் (தீவிர குற்றத்தடுப்பு பிரிவு), ஜி.கார்த்திக் பிரியா (பொன்மலை குற்றப்பிரிவு), பி.நிக்சன் (பாலக்கரை), எம்.வேல்முருகன் (தில்லைநகர்), பி.அசீம் (குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு), எஸ்.மதிவாணன் (கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு), பி.ரமேஷ் (கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு), எம்.கார்த்திகேயன் (ஆயுதப்படை) ஆகியோர் திருச்சி சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதேபோல மத்திய மண்டலத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 26 பேர் திருச்சி மாநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-செந்தில்குமார் (சைபர் கிரைம், தஞ்சை), அன்பழகன் (ஒரத்தநாடு தஞ்சை), அன்புச்செல்வன் (பட்டுக்கோட்டை, தஞ்சை), கன்னிகா (வாய்மேடு, நாகை), வெற்றிவேல் (வெளிப்பாளையம், நாகை), அழகம்மாள் (மாவட்ட குற்றப்பதிவேட்டு கூடம், பெரம்பலூர்), மணிவண்ணன் (பாடாலூர், பெரம்பலூர்), பெரியசாமி (திருமானூர், அரியலூர்), ராஜகணேஷ் (மத்திய மண்டலம்), முனியாண்டி (பெருகவாழ்ந்தான் -திருவாரூர்), பிரேமானந்தம் (குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு, நாகை), சுமதி (திருச்சி சரகம்), கவிதா (சைபர் கிரைம், புதுக்கோட்டை), வினோதினி (கரூர் அனைத்து மகளிர்), விஜயலட்சுமி (மங்களமேடு அனைத்து மகளிர், பெரம்பலூர்), சுப்புலட்சுமி (அரும்பாவூர், பெரம்பலூர்), நளினி (மாவட்ட குற்றப்பிரிவு, பெரம்பலூர்), தனபாலன் (உடையார்பாளையம், அரியலூர்), பாலசுப்பிரமணியன் (செந்துறை, அரியலூர்), ராஜ்குமார் (தோகைமலை, கரூர்), விதுன்குமார் (சமயபுரம், திருச்சி), ரவிச்சந்திரன் (பண்ணப்பட்டி, புதுக்கோட்டை), அம்சவேணி (சைபர் கிரைம், கரூர்), காந்திமதி (பொன்னமராவதி போக்குவரத்து பிரிவு, புதுக்கோட்டை), மதுமதி (டவுன் போக்குவரத்து பிரிவு, பெரம்பலூர்), கார்த்திகேயன் (போக்குவரத்து பிரிவு, அரியலூர்) ஆகிய 26 பேர் திருச்சி மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.