ஓரினசேர்க்கைக்கு வர மறுத்த சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். மீன்பிடி தொழிலாளியான இவரது மகன் அஸ்வின்குமார் (வயது 8) அங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையம் முன் அஸ்வின்குமார் கழுத்து, கை, வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இதுகுறித்து சூரங்குடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த தாமஸ் (19) என்பவர் அஸ்வின்குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாக கூறப்படுகிறது. ஆனால் அவன் மறுத்து சத்தம் போட்டுள்ளான்.இதனால் ஆத்திரம் அடைந்த தாமஸ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அஸ்வின்குமாரின் கழுத்து, வயிறு, கைப்பகுதியில் கொடூரமாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அஸ்வின்குமாரை தூக்கிச்சென்று கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையம் முன் வீசிவிட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial