வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது; ஜி.கே.மணி!
2024 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் பள்ளி கல்வித்துறைக்கு கூடுதல் நிதி, புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், புதிய நீர் மின் நிலையங்கள், காற்றாலை,சூரிய ஒளி மின் உற்பத்தி,அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் மாத உதவித் தொகை,அது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விரிவுபடுத்துதல், 5000 நீர்நிலைகள் புனரமைத்தல்,காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம், 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடக்கம்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் கடன்,வடசென்னை வளர்ச்சி திட்டம்,அடையாறு சீரமைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சமூகநீதியின் பிறப்பிடம் என்றும் தொட்டில் என்றும் போற்றப்படுகின்ற தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருப்பதால் ஏற்பட்ட பாதுகாப்பு நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிற்கு தீர்வு காண்பதற்கும்,இட ஒதுக்கீடு அளவு சரியாக முறையாக உரிய வகையில் நிறைவேற்றுவதற்கும் சாதிவாரி மக்கள் தொகையை கணக்கெடுப்பு எடுக்க அறிவிக்கப்படாதது, மிக அதிகமானோர் குடிசை வீடுகளில் வாழ்பவர்களாவும் கல்வி வேலைவாய்ப்பில் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாதது, அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்ற அறிவிக்காதது,அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,நியாய விலை கடை பணியாளர்கள் போன்றவர்களின் கோரிக்கை அறிவிக்கப்படாதது,பெரிய மாவட்டங்கள் வளர்ச்சிக்காக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படாதது, காவிரியில் ஒகேனக்கலில் இருந்து காவிரி-தர்மபுரி உபரி நீர் திட்டம் அறிவிக்கப்படாதது, தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை தொடங்க அறிவிக்கப்படாதது,ஓசூர் மாநகராட்சியில் நகர் ஊரமைப்பு துறையில் வீட்டு மனைகள் கட்ட வரன்முறை அறிவிக்கப்படாதது,பாதாள சாக்கடை திட்டம்,வடக்கு சுற்றுச்சாலை அறிவிப்பு வெளிவராதது போன்ற எதிர்பார்க்கப்பட்டவைகள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாக இந்த நிதிநிலை அறிக்கை புதிய அறிவிப்புகள் வந்த நிலையில் எதிர்பார்ப்புகள் அறிவிக்கப்படாத ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. இதுபோல பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.ஒரு சில மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என் பாமக எம் எல் ஏ ஜி கே மணி தனது x பக்கத்தில் தெரிவித்துள்ளார்.