கீழரசூர் ஊராட்சி இளைஞர்கள் 20 ஆண்டுகளாக தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு பணம் வாங்காத வண்ணம் மக்கள் இருக்க பிரச்சாரம்
- கீழரசூர் ஊராட்சி இளைஞர்கள் 20 ஆண்டுகளாக தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு பணம் வாங்காத வண்ணம் மக்கள் இருக்க பிரச்சாரம்
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கீழரசூர் ஊராட்சி இளைஞர்கள் 20 ஆண்டுகளாக தேர்தல் நேரங்களில் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்காத வண்ணம் இருக்க விழிப்புணர்வு பதாகைகள்,பேரணிகள் ,துண்டறிக்கைகள், ஒலிபெருக்கிகள் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு கொடுத்து வருகிறார்கள்.
இவர்களின் நோக்கமே நமது ஊராட்சி நமது பெருமை என்ற நோக்கில் ஓட்டுக்கு பணம் வாங்காத ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.மாற்றம் ஒன்றே மாறாதது தொடர்ச்சியாக விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த தலைமுறை வாக்காளர்கள் தங்களது கைகளில் எங்கள் குடும்ப ஓட்டு.. விற்பனைக்கு அல்ல.. என்ற வாசகத்தை கையில் ஏந்தி கொண்டு முழக்கங்கள் விட்டனர்.
நம் பணம் தானே பணத்தை வாங்கிக் கொண்டு மாற்றி வாக்களிக்கலாமே என்ற சிலரின் கருத்தும் நிலவுகிறது.
நம் தமிழ் சமூகம் ஓட்டுக்கு கைநீட்டி பணம் வாங்கி விட்டால் மாற்றி ஓட்டு போட நினைக்கும் வாக்காளர் கூட ஒரு ஓட்டாவது வாங்கிய பணத்திற்கு போட வேண்டும் என்ற மனநிலைக்கு மாறி விடுகிறார்கள்..
தங்களது ஜனநாயக உரிமை விலைபோவதை அறியாமல் இருக்கிறார்கள்பணம் கொடுப்பவர்களை தடுக்க வேண்டியது தானே என்ற கருத்தும் சிலரிடம் நிலவுகிறது.
வாங்குவதாலையே கொட்டுகிறார்கள்…கொடுப்பதாலையே வாங்குகிறார்கள்… என்பதால் யாரை குறை கூறுவது
கோழியில் இருந்து முட்டை வந்ததா… முட்டையில் இருந்து கோழி வந்ததா..
என்ற கதை தான் இது..கேரளாவில் பணம் கொடுக்க வரும் கட்சிகாரர்களை மக்கள் தான் அடித்து துரத்துகிறார்கள்..
ஆனால்
நம் தமிழ் சமூகம் அந்த தெருவில் பணம் கொடுத்து விட்டார்கள் ஏன்? இன்னும் இந்த தெருவிற்கு கொடுக்கவில்லை என்று சண்டை போடும் அளவிற்கு தற்போது நிலை உள்ளது.ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் தங்களது அம்மா,அப்பா, தங்கை,அக்கா அண்ணன்,அண்ணி,தாத்தா,பாட்டி அனைவரிடமும் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று உரக்க சொல்ல வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்கள் போல இனிவரும் காலங்களிலாவது சமூகப் புரட்சியாக இதை மேற்கொண்டால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்
முத்துசூர்யா