திருநங்கையுடன்  காதல்; பெற்றோர், மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை!

செங்கல்பட்டை அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலனியை சேர்ந்தவர் ராமு (வயது 24). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. ராமுவும் அதே பகுதியை சேர்ந்த திருநங்கையான சரளா என்பவரும் காதலித்துவந்ததாக கூறப்படுகிறது. ராமுவின் திருமணத்திற்கு முன்பிலிருந்தே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். திருமணம் செய்து வைத்தால் சரளாவை விட்டு மீண்டு விடுவான் எனக்கருதி ராமுவின் பெற்றோர் ராமுவிற்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஓரிரு மாதங்கள் சரளாவுடன் பழகாமல் பேசாமல் இருந்து வந்த ராமு மீண்டும் திருநங்கை சரளாவுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் ராமு, மனைவியிடம் சரிவர அன்பு காட்டவில்லை. இது குறித்து ராமுவின் மனைவி திருநங்கை சரளாவையும் தனது கணவர் ராமுவையும் கண்டித்துள்ளார். சரளாவின் பழக்கத்தை விட்டொழிக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனால் ராமுவும் அவரது திருநங்கை காதலி இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் பழவேலி பாலாற்றங்கரையில் ஒரு மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial