வானதிராயபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
வானதிராயபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட வானதிராயபுரம் ஊராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் தென் கொத்து பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்
வானதிராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 20 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற கோரியும் அப்பகுதியில் நிலவு வரும் குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்வுக்கான வேண்டும் என வலியுறுத்தி காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மேலும் முந்தைய கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பின்னர் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன சுரங்கம் உன்னையே பகுதி அருகாமையில் அமைந்துள்ள கிராமம் என்பதால் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை என்எல்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.