வடலூர் அருகே கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு திருவிழா பள்ளிக்கு, கிராம மக்கள் சீர்வரிசை,
கடலூர், மாவட்டம்
வடலூர் அருகே உள்ள கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாலை ஆண்டு திருவிழா வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி லட்சுமி தலைமையில், வட்டாரக் கல்வி அலுவலர்கள், நிலை இரண்டு,விமல்ராஜ், நந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள், பள்ளிதலைமை ஆசிரியர் அந்தோணி ஜோசப் அனைவரையும், வரவேற்றார், ஆண்டறிக்கை, ஆசிரியைகள், லயோனா, கீதாமஞ்ஜித், ஆகியோர் வாசித்தார்கள்,விழாவின் சிறப்பு விருந்தினர்,டிஆர்எம் கல்வி அறக்கட்டளை நிறுவனர், டிஆர்எம் ராஜமாரியப்பன், ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகளுக்குபரிசுகளையும் விருதுகளையும் வழங்கிசிறப்புரை ஆற்றினார், கருங்குழி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முருகன், அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்,கனகசபை,ஊராட்சி மன்ற
துணைத்தலைவர், ஜோதிராமலிங்கம், தம்பிப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைஞன், அருட்பா இசை சங்க நிர்வாகி கிஷோர்குமார், பள்ளிமேலாண்மைக்குழுத்தலைவர் ராஜஸ்ரீ, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்,இதில் மாணவ, மாணவிகளின், பேச்சுப்போட்டி,நடன நாட்டியகலைநிகழ்ச்சிகள்,
,நடைபெற்றன, நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சாந்தி, மேரிபுஷ்பலதா, மற்றும் பெற்றோர்கள்கலந்துகொண்டனர்
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர் அனைவருக்கும்,டி ஆர் எம் சாந்தி நிறுவனத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது, முன்னதாக, கிராம மக்கள், பள்ளிக்கு சீர்வரிசையாக, குப்பை கூடை, துடைப்பம், சோப்பு, பிளிச்சிங், பவுடர்கள் வழங்கினார்கள்,நிறைவாக ஆசிரியர்ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்,