காலியாகவுள்ள “56 மாநிலங்களவை உறுப்பினர்” பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப். 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- நிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் (10), மகாராஷ்டிரம் (6), பிகார் (6), மேற்கு வங்கம் (5), மத்தியப் பிரதேசம் (5), குஜராத் (4), கர்நாடகம் (4), ஆந்திரப் பிரதேசம் (3), தெலங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிஸா (3), உத்தரகண்ட் (1), சத்தீஸ்கர் (1), ஹரியாணா (1), மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் (1) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.