பனி முடித்து வெளியே வரும்போது மாரடைப்பால் இறந்த ஒப்பந்த தொழிலாளி என்எல்சி சுரங்க நிர்வாக அலுவலகம் முன்பு உறவினர்கள் முற்றுகை போராட்டம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(56) கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இரவு பணி முடித்து இன்று காலை சுரங்க நுழைவாயில் இருந்து வெளியே வரும்போது மாரடைப்பு ஏற்பட்டு சக தொழிலாளியின் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.ஏற்கனவே இறந்து விட்டதாக என்எல்சி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததால் ராஜேந்திரன் உறவினர்கள் பணி முடித்து வீடு திரும்பும் போது இறந்த ராஜேந்திரனுக்கு உரிய இழப்பீடும், வாரிசுக்கு வேலை கேட்டு உறவினர்கள் இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கம் முன்பு உள்ள நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.