NLC நிலம் – வீடு இழந்தோர்க்கு! உரிய இழப்பீடு இல்லை ! நிரந்தர வேலை இல்லை ! “நிஜ போராட்டம்! நிழல் போராட்டம் அல்ல” !
NLC முதல் இரண்டு சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த, NLCம், மாநில அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் நியாயமான, நிரந்தர பணி என்கிற கோரிக்கை NLC ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்தகாலத்திலும் நிலம் கையகப்படுத்தும்போது, பங்கேற்ற அரசியல் கட்சிகள் கடைசி நேரத்தில் உரிய அழுத்தம் தராததால், விவசாயிகளின் கோரிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டதை தீவிரம் காட்டும் அரசியல் கட்சிகள் இப்போது சுலபமாக மறந்துவிட்டனர்.
2009 - 10ஆம் ஆண்டுகளில், அன்றைய திமுக அரசு, மாவட்ட ஒரே அமைச்சர் திரு.MRK பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் திரு.சீத்தாராமன், வழக்கம்போல் MLA ஸ், MPஸ் , அனைத்து கட்சிகள், விவசாயிகள் பங்கேற்க நடந்துமுடிந்த கூட்டத் தில்,
CPI கட்சி சார்பில் முன்வைத்த மூன்று கோரிக்கைகள். 1. உரிய இழப்பீடு
2.R and Rpolicy படி, நிவாரணம்
- நிரந்தர பணி
இவைகளை NLC ம், மாநில திமுகஅரசும் ஏற்கவில்லை.
எனவே, CPI ம், அன்றைய அதிமுக சார்பில் பங்கேற்றex MLA திருமதி செல்வி. ராமஜெயம், இருவர் மட்டும் கையெழுத்து போடாமல் வெளியேறினோம். மற்றவர்கள் கையெழுத்து போட்டனர்.
அந்த மினிட் விபரம்முழுவதும் அனைவரும் அறிந்த ஒன்றே.
அந்த அனுபவத்தில்தான், NLC சிற்சில சலுகைகள் அறிவித்துள்ளது.
இப்போதும் project affected விவசாயிகளின் குடும்பத்திற்கு நிரந்தர பணி வழங்க முன்வராதது கண்டனத்திற்குறியது.
இதிலே நாம் வருத்தப்படுவது என்னவென்றால்,
மத்திய அரசு, NLC நிர்வாகம் விவசாயிகளை வஞ்சிக்கிறது, இதை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுகொள்கின்றன. இப்படி இருக்கும்போது, மத்திய அரசை எதிர்க்க, தமிழகத்தில் ,அனைத்து கட்சிகளை திரட்டும் திமுக, இதற்கு ஏன் தலைமை ஏற்க தயங்குகிறது. NLCன் நில ஆர்ஜித நடவடிக்கைகளை ஏன் தடைசெய்யவில்லை. கடலூர் மாவட்ட ஆட்சியரையே, NLCன் PRO வாக ஏன் மாற்றியது. NLCன் இந்த விவசாயிகள் விரோத நடவடிக்கையை, ஆளும் அரசு கட்டுபடுத்தாமல், ‘கட்டுபடுத்த வேண்டும் என்கிற அழுத்தத்தை உடனிருக்கும் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தாமல்,
இப்படி – அப்படி என்று பேசுவது விவசாயிகளை காத்திட உதவாது.
NLC ஐ பொருத்தமட்டில், ஏற்கனவே நிலம் கொடுத்து நிரந்தர பணி மறுக்கப்பட்ட விவசாய குடும்பங்கள்,இன்றுவரை பணி நிரந்தரத்திற்கு போராடும் தொழிலாளர்கள் இணைந்து போரடும்போதுதான் நீதி கிடைக்கும், இதற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்தால் போதும், இதற்கு தேவை
” “ஒரு நிஜ யுத்தம்-நிழல் யுத்தம் அல்ல”
விவசாயிகளை – தொழிலாளர்களை பாதுகாக்க எப்போதும் போல,
NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் முன்னணியில் நிற்கும்.
அடுத்த போராட்ட தகவலுடன்: M.சேகர், சிறப்பு செயலாளர்!