கள்ளச்சாராய கும்பலால் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆறுதல
மயிலாடுதுறை மாவட்டம்,
முட்டம் கிராமத்தில் கள்ளசாராய விற்பனையை தட்டி கேட்டதற்காக படுகொலை செய்யப்பட்ட
கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரின் பெற்றோர்களை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு தோழர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் மற்றும் மாவட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
காவல்துறை தலைவரின் கருத்து முற்றிலும் தவறானது.
கிராமத்து மக்களிடையே கே.சாமுவேல்ராஜ் உரை
முட்டம் கிராமத்தில் கள்ளசாராய விற்பனை செய்யக்கூடாது என்று கூறியதற்காக ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு மாணவர்கள் கள்ளச் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.கள்ள சாராய வியாபாரிகளால் இரண்டு இளம் சிறுவர்கள் கொலைசெய்யப்பட்ட சோகத்தில் ஒட்டு மொத்த கிராமமும் ஆழ்ந்திருக்கிற போது இக்கொலைகளுக்கு கள்ள சாராயம் காரணமில்லை,முன் விரோதமே காரணம் என்று மாநில காவல்துறை தலைவரே கூறியிருப்பது அதிர்ச்சி தருகிறது.
இது குறித்து மக்கள் தெரிவிக்க கூடிய கருத்துக்கள் காவல்துறை தலைவரின் அறிக்கை எவ்வளவு தவறானது என்பதை படம் பிடித்து காட்டுகிறது.சின்னஞ்சிறிய அந்த தலித் கிராமத்தில் வீடு தவறாமல் பட்டதாரிகளும் மாணவர்களும் உள்ளனர்.இவர்களை சீர்குலைக்கும் நோக்கில் கள்ள சாராயம் விற்பனை நடைபெறுகிறது.இது குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.மாறாக
கள்ளசாராய விற்பனைக்கு துணையாக செயல்பட்டதாகவே மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.குறிப்பாக பெரம்பூர் காவல் ஆய்வாளர் திருமதி நாகவள்ளி தான் இதற்கு முக்கிய காரணம் என்று கிராம மக்கள் கூறுவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்படி ஆய்வாளர் மீது உடனடியாக சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.அதோடு குண்டர் தடுப்புச் சட்டத்திலும் இவர்கள் மீதான வழக்கு மாற்றப்பட வேண்டும்.கள்ளசாராய விற்பனையை தடுக்கிற உயரிய நோக்கில் செயல்பட்டதற்காக மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.எனவே அரசு கொல்லப்பட்ட இரண்டு மாணவர்கள் குடும்பத்திற்கும் தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வழியுத்தினார்.மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.