ஆண்டாள் கோவிலில் பழமையான கொடி மரம், கற்சிலைகளை காணவில்லை என போலீசில் புகார்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பழமையான கொடி மரங்கள் மற்றும் கற்சிலைகள் காணவில்லை என கோயில் நிர்வாக அதிகாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு கொடி மரங்களையும் வெள்ளை அடிப்பு பணிக்காக ரமேஷ் என்ற நபர் மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து ஆகிய இருவரும் லாரி மூலம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *