தமிழக மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்றால், பா.ம.க ஆட்சி அமைய வேண்டும்-ராமதாஸ்!
சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், தமிழக மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்றால், அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க ஆட்சி அமைய வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க நாம் தயாராக உள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு லட்சம் ஓட்டுகளை பெற்றால், சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் நம் இலக்கை அடைய முடியும். நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும், 60 சட்டமன்ற தொகுதிகளிலும் நம்மால் வெற்றி பெற முடியும். இதற்காக, மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டாலும், குறைந்தது 7 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆனால், உங்கள் விருப்பப்படி தனித்து போட்டியிட நாம் தயாராக இல்லை என்றார்.