தேசிய அளவிலான நெட்பால் போட்டிக்கு மாணவர்களை வழியனுப்பும் விழா!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் புதுடெல்லியில் இந்திய பள்ளிக்கல்வி குழுமம் நடத்தும் 67 வது தேசிய அளவிலான நெட்பால் போட்டியானது 03-01-2024 முதல் 10-01-2024 வரை நடைபெறுகிறது. இப்போட்டிற்கு தமிழக அணி சார்பில் பங்கேற்கும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரணீஸ்வரன், கிருத்திகா, கனிஷ்கா, கோபிசந்த், சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரித்தீஷ், தளவாய் டிஎஸ்என் பள்ளி மாணவர்கள் சந்திப், முத்துக்குமரன் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாட உள்ளனர். மேலும் தமிழக அணி பயிற்சியாளர் ஜெயங்கொண்டம் கார்த்திக், ராஜன் ஆகியோரை சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாண்டியன், பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனரும், அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளருமான பரப்ரம்மம் முத்துக்குமரன், ஹோட்டல் ஸ்ரீ கார்டன் உரிமையாளரும், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவருமன ஆர்.கே.சண்முகம், பள்ளி துணை முதல்வர் தாரணி மற்றும் பெற்றோர்கள் வழி அனுப்பி வைத்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *