“பசுமை தாயகம் அமைப்பிற்கு” டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் வெண்பேடு கிராமத்தில் சாலையின் நடுவே மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. அது வெட்டி வீழ்த்தப்படலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில், அதை கடந்த ஜூலை 24-ம் தேதி பசுமைத்தாயகம் அமைப்பினர் பாதுகாப்பாக அங்கிருந்து வேருடன் அகற்றி அருகிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நட்டனர். தொடர் பராமரிப்பு காரணமாக அந்த மரம் இப்போது நன்கு தழைத்து வளரத் தொடங்கியுள்ளது. மரத்தைக் காத்து அதன் மூலம் மண்ணையும் காக்கும் பசுமைத் தாயகம் அமைப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பாராட்டுக்களை தெரிவித்தார்.