தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ராணி தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியை வாசிக்க அனைத்து பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.