வீடு புகுந்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு; என்ஜினீயர் பலி!

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் ஸ்ரீசக்தி நகர் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன் (வயது 65). இவர் சென்னை துறைமுகத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சியாமளா(வயது 45). இவர்களுக்கு மோனிகா (வயது 19), தீக்‌ஷிதா (வயது 12) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இரவு மாதவன், அவரது மனைவி சியாமளா, மகள் தீக்‌ஷிதா மற்றும் அவரது மாமியார் ஆறுமுகம்மாள் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது முகமூடி அணிந்து கொண்டு அரிவாளுடன் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் மாதவனை சரமாரியாக வெட்டினார். அதை தடுக்க முயன்ற மாதவனின் மனைவி, மகள் மற்றும் மாமியார் ஆகியோரையும் மா்மநபா் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த மர்ம நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *