கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் ,கடலூர்கிழக்குமாவட்ட செயலாளரமான, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அறிக்கை
- கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்,கடலூர்கிழக்குமாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அறிக்கை
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், 30.5.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு, வடலூர், மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் மாவட்டஅவைத்தலைவர் .
து.தங்கராசு தலைமையில் நடைபெற உள்ளது. ‘
மாவட்ட கழக செயலாளரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான எம்ஆர் கே பன்னீர்செல்வம் விளக்க உரை ஆற்றுவார், முன்னதாக கீழ்கண்ட பொருள் ஆலோசிக்கப்படுகிறது,
1. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது சம்மந்தமாக.
2. ஜூன் 3 வடசென்னையில் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது சம்மந்தமாக.
3. ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் “கலைஞர் கோட்டம்” திறப்பு விழா பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் திறந்து வைத்து சிறப்பிக்கிறார். இந்த விழா முழுநாள் நிகழ்வாகக் கவியரங்கம், பட்டிமன்றம் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெறுவதால் இதில் கலந்து கொள்வது சம்மந்தமாக.
4. ஜூன் 3 அன்று கிளைக் கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தினை வைத்து கழகத் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்திடுவது சம்மந்தமாக.
5. ஜூன் 3 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கிளைக்கழகங்கள் தோறும் கொடியேற்றி, பொதுக்கூட்டங்கள் நடத்தி, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்தியது, இனிப்புகள் வழங்கியது, நலத்திட்ட உதவிகள் வழங்கியது கொண்டாடுவது சம்மந்தமாக.
6. திமுக உறுப்பினர் சேர்த்தலை முழுமைப்படுத்துதல் சம்மந்தமாகவும்.
7. இளைஞரணி சார்பாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது.
8. கழக ஆக்கப்பணிகள். குறித்து ஆலோசிக்கப்படும் எனவே
மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்திய உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை, தொண்டரணி, தொழிலாளர் அணி, மகளிர் தொண்டரணி, வழக்கறிஞர் அணி, மீனவரணி, நெசவாளர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வணிகர் அணி ஆகிய அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ளது