சேலம் மாநாட்டில் கலந்து கொள்ள நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டம் செயலாக்கத்துறை அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21 சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு முழக்கம் மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சி, வட்டம், வார்டு வாரியாக பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும். அதுசமயம், இம்மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்டத்தைத் சேர்ந்த மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகர மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிமன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், மாநகராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும். மேலும் சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கம் மாநாட்டில் காலை 8.00 மணிக்குள் நமது மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெண்சீருடையுடன் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.