காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மோதல்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடகலை – தென்கலை பிரிவினர் இடையே பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.