“இந்தியாவில் தேர்தல்கள்” என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி; 21-ம்தேதி நடக்கிறது!

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி 14-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்தியாவில் தேர்தல்கள் என்ற தலைப்பில் மாநில அளவில் பொதுமக்களுக்கான வினாடி-வினா போட்டிகள் வரும் 21-ம்தேதி காலை 11 மணி முதல் 11.45 மணி வரை நடைபெற உள்ளது. வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் இந்த வினாடி- வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதள முகவரியில் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தங்கள் பெயர் மற்றும் விவ ரங்களை பதிவு செய்யலாம். இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் செல்போன் மற்றும் இ மெயில் முகவரியை கட்டாயமாக உள்ளீடு செய்ய வேண் டும். மேலும் விவரங்களுக்கு 1800 4252 1950 என்ற மாநில உதவி மைய எண்ணிலும், 1950 என்ற மாவட்ட உதவி மைய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *