பிளாட்பாரத்தில் மோதிய ரெயில்!
சட்டீஸ்கரின் பிலாஸ்பூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமிர்தசரஸ் – பிலாஸ்பூர் சட்டீஸ்கர் ரெயிலை நேற்று முன்தினம் இரவு ரெயில் என்ஜின் இழுத்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நடைமேடையில் மோதி சேதமடைந்தது. இந்த விபத்தில் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் இந்த ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.