பி.எட். சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு; கடைசி நாள்?
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2008-ம் ஆண்டில் இருந்து பி.எட். சிறப்பு கல்வி பட்டப்படிப்பை தொலைநிலை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. தென் இந்திய அளவில் இந்த படிப்பை வழங்கி வரும் 2 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகமும் ஒன்று. இந்த படிப்பானது பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது. இந்த படிப்பை முடிப்பவர்கள் அரசு பொது மற்றும் சிறப்பு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். அந்த வகையில் 2024-ம் ஆண்டு பி.எட். சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகிற 20-ந் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://tnou.ac.in/prospectus-bed.php என்ற பல்கலைக்கழக இணையதளத்துக்கு சென்று விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேடுகளை பார்க்கலாம். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.