திருப்பதி ஏழுமலையான் கோவில் டிசம்பர் மாத காணிக்கை மட்டும் இவ்வளவு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 19 லட்சத்து 16 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒரு மாத உண்டியல் காணிக்கையாக ரூ.116.73 கோடி கிடைத்தது. பக்தர்களுக்கு 1 கோடியே 46 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 40 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் சாப்பிட்டுள்ளனர். 6 லட்சத்து 87 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.