மறைந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன்(47). இவர், தா.பழூர் போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிந்தார். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது படத்திறப்பு விழா உடையார்பாளையம் அடுத்த தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில் பங்கேற்ற செந்தில்நாதன் உடன் பணியில் சேர்ந்த ((1997 2nd Batch) காவலர்கள் தங்களின் பங்களிப்பாக ரூ.13,86,500 -க் கான காசோலையை செந்தில்நாதன் குடும்பத்தினரிடம் நேற்று வழங்கினர். இந்நிகழ்ச்சியில் உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி,ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராஜசோமசுந்தரம் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.