நெய்வேலி என்எல்சி நிறுவன தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை கேட்டு போராட்டம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் கத்தாழை, கரிவெட்டி, மும்முடிசோழகன், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வீடு நிலம் கொடுத்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர், இவர்கள் தங்களை நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் திடீரென என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதை எடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய என்எல்சி நிறுவன அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் கோரிக்கைகளை மனுவாக ஏற்றுக்கொண்டு ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக என்எல்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தொடர்ந்து என்எல்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு திரும்பி சென்றனர் மேலும் மனு மீது உரிய நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் நடத்த போவதாக தற்காலிக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.