மகளிர் அமைப்பு சார்பில் உடல் நலத்தை கெடுக்கும்,செறிவூட்டப்பட்ட அரிசியைத் திணிக்காதே ,அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், பெண்ணாடத்தில் மகளிர் ஆயம் சார்பில் உடல் நலத்தை கெடுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியைத் திணிக்காதே தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் , பொருளாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. ஞானம். இராசேசுவரி வரவேற்றார்.
அமைப்பு குழு உறுப்பினர் வித்யா, செயற்குழு உறுப்பினர்கள் இந்துமதி, தமிழ்மொழி, முன்னாள் கிளைச் செயலாளர் எழிலரசி, விருத்தாம்பாள், சாந்தலெட்சுமி, மகாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைத் தலைவர் முருகன், மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் செந்தமிழ்ச்செல்வி, தமிழக உழவர் முன்னணி பொருளாளர் கனகசபை, நல்லூர் ஒன்றியத் தலைவர் பிரகாசு, பாவலர் சிலம்புச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பரிமளா நன்றி உரையாற்றினார். நிகழ்வில், பேரியக்கத் தோழர்கள், மகளிர் ஆயம் தோழர்கள், மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் என திரளாக பங்கேற்றனர்.