சுற்றுலா பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்; 8 பேர் பலி- 15 பேர் படுகாயம்!

சென்னை வடபழனியில் இருந்து ஒரு சுற்றுலா பஸ்ஸில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்திற்கு சுற்றுலா செல்ல சென்றனர். இந்த பஸ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிரே வந்த லாரியும் சுற்றுலா பஸ்ஸும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தாய் எட்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 15 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *