வடலூர் அருகே பாஞ்சாலிதேவியார்கூந்தல் முடிதலும், தீமிதி திருவிழாவும், நடைபெற்றது, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சாமி தரிசனம்
வடலூர் அருகே பாஞ்சாலிதேவியார்கூந்தல் முடிதலும், தீமிதி திருவிழா நடைபெற்றது, பல பக்தர்கள் திரண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே
கருங்குழி,அருள்மிகு தருமராஜா துரோபதையம்மன் கோயில் தீமிதி திருவிழாஏப்ரல் 17ஆம் தேதி (சித்திரை 4ந்தேதி திங்கள் )மாலை கோட்டகம் கிராமத்தில் உள்ள, அய்யனார் கோயிலில் இருந்து கோட்டகம், வீணங்கேணி, வடக்குமேலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த குலதெய்வ வழிபாடு வகையறாவினர் ஏற்பாட்டுடன் தீமிதி திருவிழா தொடங்கியது.
விழாவையொட்டி தினசரி மாலையில் சின்ன எலந்தம்பட்டு,கலியமூர்த்தி பாரதியாரின் மகாபாரத உபன்யாச விழா தொடங்கி, இருபது நாள் நடைபெற்றது.இதில் பதினோராம் நாள் தருமராஜா பட்டாபிஷேகமும், 12ம் தேதி பாஞ்சாலி தேவியார் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
நேற்று 18ம் தேதி இரவு சிறப்பு அபஷேக ஆராதனையும், அலங்கார பூங் கரகத்துடன், அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.
தீமிதி திருவிழா,நேற்று, மே 5ந்தேதி, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அரவான்களபலியும், மாலை 3 மணிக்கு பாஞ்சாலி தேவியார்கூந்தல் முடிதலும், மாலை 5 மணிக்கு தீமிதி விழா நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து திக் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர், தொடர்ந்து இரவு 10 மணிக்கு அபஷேக ஆராதனையும் நடைபெற்றது. . . , தீமிதி திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல பக்தர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர், தொடர்ந்து, தருமர் பட்டாபிஷேகம்:நாளை மறுநாள் (ஞாயிறு) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், பாஞ்சாலி தேவி வீதியுலாவும், இரவு 8 மணிக்கு தருமர் பட்டா அபஷேகமும் நடைபெறுகிறது, நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. , மற்றும் விழாக்குழுவினர்கள், செய்து இரு ந்தனர் ,’