அரசுப்பள்ளியில் ஆண்டு விழா; கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்!
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம், நாகல்குழி (மே) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சங்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் உமையாள்,இரவிச்சந்திரன். வள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைமுத்து வரவேற்றார். விழாவில் பொதுமக்கள், நாட்டார்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் மற்றும் ஊ.ம.து.தலைவர், உறுப்பினர்கள், காலை உணவு மற்றும் மதியம் சத்துணவு பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் மாற்றுடை போட்டி, கோலப்போட்டி, இசை நாற்காலி, போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் உதவி ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.