பள்ளி மாணவியின் வயிற்றில் இருந்த தலைமுடிகள்; டாக்டர்கள் அதிர்ச்சி!
கேரள மாநிலம் பாலக் காட்டை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு கடந்த சில மாதமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியை கோழிக் கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிடி ஸ்கேன் பரிசோதனை நடத்தியதில் மாணவியின் வயிற்றுக்குள் ஒரு கட்டி போல உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய பரிசோதனையில் அது கட்டி அல்ல தலைமுடி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற தீர்மானித்தனர். தலைமை மருத்துவர் ஷாஜ கான் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மாணவியின் வயிற்றில் இருந்த முடியை அகற்றினர். தனது 28 வருட பணியில் இதுபோல ஒரு அறுவை சிகிச்சை செய்த தில்லை என்று டாக்டர் ஷாஜகான் தெரிவித்தார். மாணவிக்கு சிறு வயதில் இருந்தே முடியை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.